24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் | இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் |
எதையும் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் செய்வதில் பெரும் விருப்பமுடையவராக இருந்தவர்தான் “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரும், இயக்குநருமான டி ஆர் சுந்தரம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெருவாரியான படங்களை உருவாக்கியவர் இவர்.
1938ம் ஆண்டு மலையாளத்தின் முதல் பேசும் படமான “பாலன்” என்ற திரைப்படத்தை தயாரித்தவர் இவரே. 1952ம் ஆண்டு அமெரிக்க கம்பெனி ஒன்றுடன் இணைந்து “ஜங்கிள்” என்ற ஒரு ஆங்கில மொழி திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். 1956ம் ஆண்டு தமிழின் முதல் முழுநீள வண்ணத் திரைப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” திரைப்படத்தை தந்தவரும் இவரே. 1961ல் மலையாளத் திரையுலகின் முதல் வண்ணத் திரைப்படமான “கண்டம் பெச்ச கோட்டு” என்ற திரைப்படத்தையும் தயாரித்தவர் டி ஆர் சுந்தரமே. இப்படி பல புதுமைகளுக்கும், முதன்மைகளுக்கும் சொந்தக்காரரான இவர், 1957ல் தயாரித்த திரைப்படம்தான் “ஆரவல்லி”.
1944ல் வெளிவந்த கதையைப் புது நடிகர்களை வைத்து மீண்டும் தயாரித்திருந்தார் டி ஆர் சுந்தரம். எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியவரான இவர், உலகப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்த மாதிரி, தனது “ஆரவல்லி” திரைப்படத்தின் நாயகியான ஆரவல்லியை கழுதைப் பாலில் குளிப்பது போன்ற காட்சியை உருவாக்க விரும்பினார். ஏதோ ஒரு வெள்ளை திரவத்தைக் காட்டி இதுதான் கழுதைப் பால் என்று காட்ட விரும்பாத டி ஆர் சுந்தரம், கழுதைகளிலிருந்து பால் கறப்பது போல் காட்சியை ஆரம்பித்து, படத்தின் நாயகி ஆரவல்லி குளிக்கின்ற வரை படமாக்க நினைத்து, அதற்காக அதிகப்படியான கழுதைகளை ஓட்டி வரச் செய்தார் டி ஆர் சுந்தரம்.
பால் கறக்க துணை நடிகர்கள் கழுதைகளிடம் சென்றபோது அவை படாரென உதைக்க, பின் பத்து நாட்கள் பயிற்சி கொடுத்து, அதன் பின் அந்தக் காட்சியைப் படமாக்கினர். ஒரு சில நிமிடங்களே படத்தில் இடம் பெறும் இந்த ஒரு காட்சிக்காக அதிகப்படியான பொருள், நேரத்தை செலவிட்டு எடுத்திருந்த டி ஆர் சுந்தரத்தின் தொழில் பக்தியும், அற்பணிப்பு உள்ளமும்தான் அவரது படைப்புகளை காலம் கடந்தும் பேச வைத்துக் கொண்டிருக்கின்றது. 1957ல் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் நாயகி “ஆரவல்லி”யாக நடிகை ஜி வரலக்ஷ்மி நடித்திருந்தார்.