இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னிடம் அனுமதி பெறாமல் அதைப் பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு, பகிரங்க மன்னிப்பு, பாடல்களை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்.
இளையராஜா சார்பில் பேசிய அவரது வழக்கறிஞர்கள், அவரது அனுமதி இல்லாமல் பாடலை உருமாற்றம் செய்திருக்கிறார்கள். காப்புரிமை சட்டத்தின்படி அப்படி செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இன்று மதியம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ இளையராஜாவின் நோட்டீஸ் பற்றி பதில் விளக்கம் தருவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பொனி இசையமைத்து உலகமே வியக்கும் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு எந்தவிதமான நன்றியும் தெரிவிக்காமலும், முறையான அனுமதி பெறாமலும் 'குட் பேட் அக்லி'யில் பாடல்களைப் பயன்படுத்தி இருந்தால் அது தவறானது என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.