மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் ஜுலை 25ம் தேதி வெளியான படம் 'தலைவன் தலைவி'. இப்படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 50 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரு தினங்களுக்கு முன்பு அதன் தெலுங்கு டப்பிங் பதிப்பான 'சார் மேடம்' படமும் வெளியானது. இரண்டாவது வாரத்திலும் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் படம் ஓடி வருவதாகவும் அறிவித்துள்ளார்கள். அதனால், படம் இன்னும் கூடுதல் வசூலைக் கொடுக்க வாய்ப்புள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த 153 படங்களில் 10 படங்கள் மட்டுமே 50 கோடி வசூலைக் கடந்துள்ளன. அதில் 10வது படமாக 'தலைவன் தலைவி' படம் இணைந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில் திரையுலக வட்டாரங்களில் அறிந்து கொண்ட தகவல்படி, 'குட் பேட் அக்லி' படம் சுமார் 250 கோடி வசூலைப் பெற்று இந்த வருடத்தில் அதிக வசூலைப் பெற்ற படமாக இருக்கிறது. அதற்கடுத்து 'டிராகன்' படம் 150 கோடி, 'விடாமுயற்சி, ரெட்ரோ' 100 கோடிக்கும் கூடுதலாக, தமிழ், தெலுங்கில் வெளியான 'குபேரா' 100 கோடி, 100 கோடிக்கு மிக நெருக்கமாக 'தக் லைப், டூரிஸ்ட் பேமிலி', 50 கோடி கடந்த படங்களாக 'வீர தீர சூரன், மத கஜ ராஜா' ஆகிய படங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் அதிகபட்ச லாபத்தைக் கொடுத்த படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி' இருக்கிறது. அதற்கடுத்து 'டிராகன்' படம் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் மாதங்களில் 100 கோடி, அதற்கும் அதிகமான வசூலைப் பெறும் படங்களாக வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்ட 'கூலி, மதராஸி, இட்லி கடை, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, டூட்' ஆகிய படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.