கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 90 சதவீதத் தியேட்டர்களில் அந்தப் படம்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பாகவும், ஒரு வாரத்திற்குப் பின்பும் வேறு படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.
ஒரு வாரம் முன்பு வெளியாகும் படங்களுக்கு தியேட்டர்களில் ஒரு வாரம் ஓடும் விதத்தில்தான் ஒப்பந்தம் செய்வார்கள். 'கூலி' வெளியான பின்புதான் எத்தனை நாட்கள் ஓடும் என்பது தெரிய வரும். அதனால், குறைந்தது இரண்டு வாரங்கள் வேறு எந்தப் படத்தையும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.
ஆகஸ்ட் 1ம் தேதி 7 படங்கள் வெளிவந்த நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம், “பாய், காத்து வாக்குல ஒரு காதல், மாமரம், ராகு கேது, ரெட் பிளவர், உழவர் மகன்,” ஆகிய 6 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்.
'கூலி' படத்திற்குப் பிறகும் அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளதால் சிறிய படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பது சிரமம். அதனால், கிடைக்கும் இடைவெளியில் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களை வெளியிடுவதாகத் தெரிகிறது.




