கமல் பாடலுடன் துவங்கிய கீரவாணி : ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி | அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் |

படம் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி வந்தாலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. ஹிந்தி, மலையாள மொழியில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடத்த 70 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும் தனக்கு கடன் இருப்பதாக இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்கிறார் விஜய் சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாஸ்க் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் "இந்த படத்தில் நடிக்க 10 நாள் என்று கூட்டிச் சென்று வச்சு செய்தார்கள். முழு சம்பளமும் தரவில்லை. இன்னும் சம்பளபாக்கி இருக்கிறது. அதை தந்தால் நன்றாக இருக்கும்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது.