'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
தமிழ் திரை உலகில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கே நம்பர் ஒன் இடத்தை பிடித்து பல வருடங்கள் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் கதாநாயகியாக நடிக்கும் வரை தனது உடலை கட்டுக்கோப்பாக பேணிக் காத்து வந்தார். ஆனால் அவரது உடல் பலவீனமானதற்கு காரணம் அவர் கடைபிடித்த டயட் தான் என்றும், அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ராம்கோபால் வர்மா அவரது படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவியை தொடர்ந்து எடை குறைக்கும்படியும் டயட்டை மெயின்டன் செய்யும்படியும் அழுத்தம் கொடுத்தது தான் என்று ஸ்ரீதேவியை வைத்து சால்பாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பங்கஜ் பரசர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்த சால்பாஸ் படத்தில்தான் ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் இரண்டு கதாநாயகர்களில ஒருவராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். தமிழில் இந்தப் படம் அஞ்சு மஞ்சு என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பங்கஜ் பரசர் ஸ்ரீதேவியை வைத்து மேரி பீவி காஜா ஜவாப் நஹீம் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடித்தார்.
அதே சமயத்தில் ராம் கோபால் வர்மா படத்திலும் ஸ்ரீதேவி நடித்து வந்தார். அப்போது தனது படத்திற்காக ஸ்ரீதேவியை எடை குறைத்து உடல் மெலியும்படியும் அதற்கான டயட்டை கடைபிடிக்கும்படியும் ராம் கோபால் வர்மா தொடர்ந்து வற்புறுத்த வேறு வழியின்றி ஸ்ரீதேவியும் அதை கடைபிடிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் இப்படி மாறி மாறி வெவ்வேறு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட போது ஸ்ரீதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மேரி பீவி காஜா ஜவாப் நஹீம் படத்தின் படப்பிடிப்பின் போது அவர் உப்பு குறைந்த டயட்டை மேற்கொண்டு வந்ததால் ரத்த அழுத்தம் குறைந்து படப்பிடிப்பிலேயே மயங்கி மேஜையின் மீது இடித்தபடி கீழே விழுந்தார்.. அதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதுடன் ஒரு பல்லும் கூட உடைந்தது. இதன் காரணமாக அவர் சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று வந்தார். அதனால் குறித்த நேரத்தில் என்னுடைய படத்தை முடிக்க முடியவில்லை. எடுத்தவரை படத்தை தொகுத்து கிளைமாக்ஸ் காட்சியில் எழுத்துக்கள் மூலம் இதுதான் முடிவு என்று அறிவித்து அந்த படத்தை வெளியிட வேண்டி வந்தது என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் பங்கஜ் பரசர்.