25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! |

தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், ஆமிர்கான், ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படம் 'சிதாரே ஜமீன் பர்' கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு விமர்சகர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, “சிதாரே ஜமீன் பர்…மிகவும் பிரகாசமாக இருக்கிறது…இது உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும்…ஆமிர்கானின் அனைத்து கிளாசிக் படங்களைப் போலவே, நீங்கள் புன்னகையுடன் வெளியேறுவீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆமிர் நடித்து கடைசியாக வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில் இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.




