பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ்பாபு நடித்த ‛குண்டூர் காரம்' திரைப்படம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியானது. தற்போது அவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வரும் படம் வெளியாவதற்கு எப்படியும் இன்னும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேலாவது ஆகும். இந்த நிலையில் இந்த இடைவெளியை ரசிகர்களிடம் ஈடு கட்டும் விதமாக மகேஷ்பாபு நடித்த ஹிட் படங்களை ரீலீஸ் செய்யும் போக்கு துவங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த மே மாதம் மகேஷ்பாபு நடித்த ‛கலீஜா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாளிலேயே 13 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 2012ல் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு மையக்கருவை ராம்கோபால் வர்மா தான் கொடுத்திருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் சாதாரண பிரிண்டாக ஏற்கனவே கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் மகேஷ்பாபுவின் 48வது பிறந்த நாளில் வெளியானது. தற்போது இந்த படம் 4கே தொழில்நுட்பத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் வெளியான சமயத்தில் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலக அளவில் 90 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.