கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு |

சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி தருவதாகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய பட வெளியீட்டின் போது, கிடாய் வெட்டி பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்களை இனி அதுபோல் உயிர்பலி செய்யக்கூடாது என்று கூறி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர் ஒருவர் திரையரங்கு முன்பாக சமீபத்தில் கட்டப்பட்டிருந்த 'வாரணாசி' படத்தின் மகேஷ்பாபு போஸ்டர் முன்பாக நின்றுகொண்டு ஒரு பாட்டிலை எடுத்து தனது தலையில் உடைத்து, தலையில் வழிந்த ரத்தத்தால் போஸ்டரில் மகேஷ் பாபுவின் நெற்றிக்கு ரத்தத் திலகம் வைக்கிறார். அதன்பிறகு அவருக்கு தீபாராதனையும் காட்டுகிறார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹீரோக்கள் தங்களது ரசிகர்களுக்கு ரொம்பவே கண்டிப்பும் கறாருமாக உத்தரவு போட்டால் கூட இவர்களின் செயல்களை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை.




