மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஆசியாவிலேயே மிகப்பெரிய திரைப்பட நகரம் என்கிற பெருமையை பெற்றது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. தென்னிந்திய படங்கள் மட்டுமல்லாது பாலிவுட் படங்கள் கூட பெருமளவு அங்கே தான் படமாக்கப்படுகின்றன. இந்த நிலையில் பாலிவுட் நடிகை கஜோல், ''ராமோஜி ராவ் பிலிம் சிட்டி ரொம்பவே அமானுஷ்யமானது'' என்கிற ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார். கஜோல் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'மா'. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எனக்கு அவ்வளவாக வசதியாக உணர முடியாத பல இடங்களில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறேன். அங்கே எல்லாம் என்னால் தூங்க முடியாது. அப்படித்தான் இந்த உலகத்தில் உள்ள மிக அமானுஷ்யமான பகுதிகளில் ஒன்றாக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியை நான் கருதுகிறேன். அங்கே எந்த விதமான அமானுஷ் உருவங்களையும் பார்க்கவில்லை என்றாலும் கூட அமானுஷ்யத்தை என்னால் உணர முடிந்தது” என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பேச்சை தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் அவரது கருத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பு குரல்கள் தொடர்ந்து எழுந்தன. பாலிவுட்டிலேயே கூட பல பிரபலங்கள் கஜோலின் இந்த கருத்தை பெரிய அளவில் ரசிக்கவில்லை. தான் கூறிய கருத்து இப்படி எதிராக திரும்பியதால் அதை சமாளிக்கும் விதமாக தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் சமாளிப்பு விளக்கம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை கஜோல்.
அதில் அவர் கூறும்போது, “நான் இதற்கு முன்னதாக ராமோஜி ராவ் பிலிம் சிட்டி பற்றி கூறிய என் கருத்து பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அது என்னுடைய மா படத்திற்கு புரமோஷனுக்காக சொல்லப்பட்டது. நான் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இத்தனை வருடங்களில் பலமுறை அங்கே தங்கி இருக்கிறேன். எப்போதுமே அது படப்பிடிப்பு நடத்துவதற்கான அருமையான சுற்றுச்சூழல் கொண்ட இடமாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுது போக்கும் சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் அது சிறந்த பாதுகாப்பான ஒரு இடமும் கூட” என்று கூறியுள்ளார்.