விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1, 2' படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, விருதுகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' என்ற பாடல் காப்புரிமை பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வீரா ராஜ வீரா பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970ல் இசையமைக்கப்பட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் பாடலின் மூலப்பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். அதை கேட்ட நீதிபதிகள், வரிகள் தனித்தனியாக இருந்தாலும் ராகம் ஒன்றுதான் எனவே காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரஹ்மான், பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு 2 கோடி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.