அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கடந்த வாரம் கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் தஸ்லீமா சுல்தானா ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவரிடமும் இரண்டு கோடி மதிப்பிலான போதைப் பொருளாக கஞ்சாவை கைப்பற்றியதுடன் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண் மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு தாங்கள் போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறியுள்லாதக சொல்லப்படுகிறது. இதில் ஸ்ரீநாத் பாஷி என்பவர் கடந்த வருடம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படத்தில் குழிக்குள் தவறி விழும் இளைஞராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
இந்த நிலையில் தற்போது இந்த போதை வழக்கில் கைதான பெண்மணி தன் பெயரை இழுத்துள்ளதை தொடர்ந்து ஒருவேளை தான் கைது செய்யப்படலாம் என நினைத்து நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி இருந்தார். ஆனால் அந்த மனுவை தற்போது வாபஸ் பெற்றுள்ளார் ஸ்ரீநாத் பாஷி. இது குறித்து ஸ்ரீநாத் பாஷி தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், தற்போது தான் ஒரு படத்தில் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன் என்றும் சமீபத்தில் வெளியான இந்த போதை வழக்கு செய்தியில் தனது பெயர் அடிபட்டதால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என நினைத்ததாகவும் அதனால் படப்பிடிப்பு தடைபடுமே என்கிற எண்ணத்தில் முன் ஜாமினுக்கு விண்ணப்பித்ததாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமல்ல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தஸ்லீமா சுல்தானா என்கிற பெண், தனது ரசிகை என கிறிஸ்டினா என்கிற பெயரை சொல்லிக்கொண்டு தன்னிடம் போனில் தொடர்பு கொண்டதாகவும் கொஞ்ச நேரம் இயல்பாக பேசிவிட்டு அதன் பிறகு தன்னிடம் போதை பொருளான கஞ்சா இருப்பதாகவும் உங்களுக்கு தேவையா என்று கேட்டதுமே தான் அவருடனான தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டதாகவும் அதற்குப் பிறகு அவரிடம் இருந்து வந்த எந்த ஒரு செய்திக்கும் தான் பதில் அளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல சினிமாவில் தான் நன்கு அறிமுகமான நடிகர் என்பதால் இது போன்று எந்த போதை பொருள் டீலிங்கிலும் ஒருபோதும் தான் தொடர்பு கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீநாத் பாஷி.