இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் பிரபலம் இல்லாத சின்ன சின்ன நடிகர்களுடன், ஓரளவு பிரபலமான நடிகர் சவுபின் ஷாஹிர் மற்றும் ஸ்ரீநாத் பாஷி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும்போது அங்கிருந்த குணா குகைக்குள் ஸ்ரீநாத் பாஷி தவறி விழுந்து விட அவரை காப்பாற்ற உடன் வந்த நண்பர்கள் நடத்தும் போராட்டம் தான் இடைவேளைக்கு பிறகு மீதி படம் முழுவதும் இடம் பெற்றிருந்தது. சொல்லப்போனால் இதை ஒரு சர்வைவல் திரில்லர் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது அப்படி குழிக்குள் விழுந்த நடிகரான ஸ்ரீநாத் பாஷி மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி1 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள வாகமன் பகுதியில் இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தன்னுடைய சொந்த ஊருக்கு வரும்போது சில எதிர்பாராத சம்பவங்களால் சிக்கலுக்கு ஆளாகிறான். அப்படிப்பட்ட சூழலில் அந்த இடத்திலிருந்து அவன் எப்படி தப்பிக்க முயற்சிக்கிறான் என்பதை மையப்படுத்திய ஒரு சர்வைவல் திரில்லராக இந்த படம் உருவாகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஷான் எம் என்பவர் இயக்குகிறார்.