குட் பேட் அட்லி டீசர் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ஆதிக் | லோகேஷ் பிறந்தநாளில் வெளியிட்ட கூலி புகைப்படங்கள் | நான் சினிமாவில் நீடிக்க பாக்யராஜ்தான் காரணம் : சாந்தினி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தர்ஷன் | உபாசனா நடிக்கும் 'எனை சுடும் பனி' | பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் |
மார்ச் மாதம் வந்தாலே தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வருகை குறைந்துவிடும். முழு ஆண்டுத் தேர்வுதான் அதற்கு முக்கிய காரணம். இருந்தாலும் நேற்று எட்டு புதிய படங்கள் வெளிவந்தன. அடுத்தடுத்த வாரங்களில் பட வெளியீடுகள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 21ம் தேதி குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஓரிரு படங்களின் அறிவிப்புகள் வந்துள்ளது. அதே சமயம் மார்ச் 27ம் தேதி விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படங்களும் வர வாய்ப்பில்லை.
பின்னர் ஏப்ரல் 4ம் தேதி வெளியீடு என எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ஏப்ரல் 10ம் தேதி 'குட் பேட் அக்லி, இட்லி கடை' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 'இட்லி கடை' திட்டமிட்டபடி வெளிவருமா என்பது சந்தேகம்தான்.
அடுத்த ஆறு வாரங்களில் நிறைய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.