சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாகிர், அமிர்கான், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'கூலி'.
இப்படத்தின் வியாபாரம் உலக அளவில் எந்த அளவிற்கு நடந்திருக்கும் என்பது குறித்து கோலிவுட்டில் விசாரித்து தெரிந்து கொண்ட தகவல். இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
தமிழகத்தில் 120 கோடி, வெளிநாடுகளில் 75 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 45 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, கேரளாவில் 15 கோடி, வட இந்தியாவில் 50 கோடி என வியாபாரம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மொத்தமாக 325 கோடி. மொத்த வசூல 625 கோடியைக் கடந்தால் இந்தப் படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும்.
தியேட்டர் அல்லாத வருமானத்தில், ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, இசை உரிமை ஆகியவற்றைச் சேர்த்து 220 கோடி வரை வருவாய் வந்திருக்கும் என்கிறார்கள். இது நேரடியாக தயாரிப்பாளரைச் சேர்ந்துவிடும்.
ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட்டான 'ஜெயிலர்' படத்துடன் ஒப்பிடும் போது இதன் வியாபாரம் கூடுதலாகவே நடந்துள்ளதாம். அதை மிஞ்சியுள்ளது 'கூலி' வியாபாரம். அடுத்து 'ஜெயிலர் 2' படம் வரும் போது அது 'கூலி' வியாபாரத்தை மிஞ்சி நடக்கும் என்கிறார்கள்.
'கூலி' படம் முன்பதிவின் மூலம் மட்டுமே 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய முதல் நாள் வசூலும் 150 கோடியை நிச்சயம் கடந்துவிடும் என்று சொல்கிறார்கள்.