துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக உள்ளனர் ரஜினியும், கமலும். ரஜினி 50 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்து பயணிக்கிறார். கமல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்து பயணிக்கிறார். இருவரும் 70 வயதை தாண்டியும் சினிமாவில் இன்னும் ஹீரோவாக நடிக்கிறார்கள். 46 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பதாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
ஆரம்பத்தில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து13 திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். ரஜினி அறிமுகமான ‛‛அபூர்வ ராகங்கள் தொடங்கி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கு, நட்சத்திரம், தில்லு முல்லு'' உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்கள்.
நினைத்தாலே இனிக்கும்(1979) படத்துக்குபின் இருவரும் இணைந்து ஹீரோக்களாக நடிக்கவில்லை. இனி அவரவர் வழியை பார்ப்போம் என பேசி பிரிந்துவிட்டார்கள். ரஜினி நடித்த தில்லு முல்லு(1981) படத்தில் கவுரவ வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். பின்னர் இருவரும் போட்டியாளர்கள், நண்பர்களாக இருந்தனர். இருவரையும் இணைக்க பலர் முயற்சித்தார்கள். பல தயாரிப்பாளர்கள், முன்னணி இயக்குனர்கள் அதற்கான வேலைகளை செய்தனர். ஆனால், கதை, பட்ஜெட், சம்பளம், ரசிகர்கள் எதிர்பார்ப்பு போன்ற பல காரணங்களால் அந்த படம் நடக்கவே இல்லை.
நடக்குமா...
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக தகவல் கசிந்தது. அதுவும் நடக்கவில்லை. இப்போது ரஜினி, கமல்ஹாசன் இணையப் போகின்றனர். அந்த படத்தை ராஜ்கமல் தயாரிக்கப் போகிறது என்று தகவல் கசிகிறது. இது நடக்குமா என்று ரஜினி, கமல் தரப்பில் விசாரித்தால் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதுவும் இப்போது நடக்க வாய்ப்பில்லை. அடுத்து கைதி 2 படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ், அதற்கடுத்து சில படங்கள் கமிட்டாகி இருக்கிறார். அவரும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். அதை முடித்துவிட்டு வரவே சில ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை எதுவும் சொல்ல முடியாது.
இப்போது கூலி படத்தை முடித்துவிட்டு பாலித்தீவில் லோகேஷ் ஓய்வெடுத்து வருகிறார். ஜெயிலர் 2 வில் கவனம் செலுத்துகிறார் ரஜினிகாந்த். இந்த ஆண்டு முடிவில் அந்த படம் முடிந்துவிடும். அடுத்த படம் குறித்து அவர் முடிவெடுக்கவில்லை. கமல் கையில் இந்தியன் 3, அன்பறிவ் இயக்கும் படங்கள் இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. அவர் பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டும். ஆகவே, இப்போதைக்கு இது பற்றி உறுதியாக சொல்ல முடியாது.
ரஜினி, கமல் இணைந்தால் அந்த படத்தின் நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளமே 400 கோடியை தாண்டும். படப்பிடிப்பு செலவு தனி. அந்த பட்ஜெட்டில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்குமா, அதுவும் லோகேசை வைத்து படம் எடுக்குமா என தெரியவில்லை'' என்கிறார்கள்.
சாத்தியமே
அதேசமயம் இன்னொரு தரப்போ ரஜினி, கமல் இணைவது உறுதி. சில ஆண்டுகளாக அந்த படம் பற்றி பேச்சு வந்தது. இப்போது தான் முடிவாகி இருக்கிறது. 6 மாதங்களாக இதற்கான வேலைகள் மறைமுகமாக நடக்கிறது. ஜெயிலர் 2 பட வேலைகள் முடிந்தவுடன் ரஜினி, கமல் இணையும் பட அறிவிப்பு வரும். இப்போது கைதி 2வை லோலேஷ் பண்ணவில்லை. கூலி விமர்சனங்கள் குறித்து இரண்டு ஹீரோக்களும் மனதில் கொள்ளவில்லை.
46 ஆண்டுகளுக்கு பின் இணையும் படம் குறித்து ஆர்வமாக இருக்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். ராஜ்கமலுடன் ரஜினி இணையும் படத்தை ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்க வாய்ப்பு. ஆகவே பட்ஜெட் குறித்து யாருக்கும் பயமில்லை. எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து கூண்டுகிளியில் நடித்தார்கள். விஜய் அஜித் ராஜாவின் பார்வையிலே நடித்தார்கள். ரஜினியும், கமலும் 46 ஆண்டுக்குபின் இணைகிறார்கள். அது தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.