இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கடந்த 2022ல் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‛ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து அதிரடியாக நடனமாடிய ‛நாட்டு நாட்டு' என்கிற பாடல் ரசிகர்களின் பேவரைட் பாடலாகவும் மாறியது. அதுமட்டுமல்ல இந்த பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.
இந்த பாடலை பாடிய பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச் என்பவர் இவர் இதற்கு முன்னதாகவே தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3ல் வின்னராக வெற்றி பெற்றிருந்தாலும் இந்த பாடல் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. கடந்த மாதம் கூட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த பாடல் மூலம் ஆஸ்கார் லெவலுக்கு தெலுங்கு திரை சினிமாவை கொண்டு சென்றதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த சந்தோஷத்துடன் தற்போது திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்க தயாராகி விட்டார் ராகுல் சிப்லிகஞ்ச். இவருக்கும் ஹரிண்யா ரெட்டி என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தாரும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று எங்களது புதிய ஆரம்பம் என்று குறிப்பிட்டு தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளனர் இந்த வருங்கால தம்பதியினர். தெலுங்கு திரையுலகில் இருந்து இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.