ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான். ஏற்கனவே இவருக்கு இரண்டு முறை திருமணமாகி, மனைவிகளை பிரிந்துவிட்டார். முதல் மனைவி ரீனா தத்தாவை 1986ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத், ஐரா என்ற மகன், மகள் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர் அதன்பின் 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் 2021ல் கிரணையும் பிரிந்தார் அமீர். அதன்பின் நடிகை ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தார்.
தற்போது 60வயதை எட்டி உள்ள தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது புதிய காதலியான கவுரியை அறிமுகம் செய்துள்ளார். அமீர்கான் கூறுகையில் ‛‛நானும், கவுரியும் 25 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தோம். ஒன்றரை ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறோம். 60 வயதில் எனது திருமணம் மகிழ்ச்சியை தருமா என தெரியவில்லை. ஆனால் என் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என் முன்னாள் மனைவிகளுடன் நல்ல உறவில் இருக்கிறேன். எங்களது உறவால் குடும்பத்தில் மகிழ்ச்சியே'' என்றார்.