'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அறிவழகன் இயக்கத்தில், ஆதி, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சப்தம்'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக வேண்டிய படம் அன்றைய தினம் வெளியாகாமல் மறுநாள் மார்ச் 1ம் தேதி பகல் காட்சி முதல்தான் வெளியானது. கடைசி நேரத்தில் பைனான்சியர் தரப்பிலிருந்து கொடுத்த சிக்கல்தான் காரணம்.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை குறித்த சிக்கலும் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது. அந்த சிக்கல் தற்போது வரை நீடித்து வருகிறது. பைனான்சியருக்குத் தரவேண்டிய தொகையை சொன்னபடி வெளியீட்டிற்கு முன்பு தராத காரணத்தால் வழக்கு தொடர்ந்தார்கள். அது குறித்த விசாரணை நடந்து முடிந்த பின் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு தடை விதித்துள்ளார் நீதிபதி.
தயாரிப்பாளருக்கு வந்து சேரவேண்டிய பாக்கி சில கோடிகள் இருக்கிறதாம். அதனால், ஒரு கோடியே 25 லட்ச ரூபாயாக சில தவணைகளில் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம். பைனான்சியருக்கு சேர வேண்டிய தொகையை நீதிமன்றத்தில் தவணையில் செலுத்திய பின்னர்தான் ஓடிடி உரிமைக்கு விதித்த தடை நீங்கும் என்கிறார்கள்.
தாமத வெளியீட்டால் படம் வந்த போது பெரிதாக விளம்பரப்படுத்தவில்லை. ஓடிடியில் வெளியாகி வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.