'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் |
பிரேமலு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகையான மமிதா பைஜூ. இப்போது விஜய் உடன் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில், ‛‛நான் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது கூட டாக்டர் கனவு இருந்தது. ஆனால், 7 படங்களில் நடித்தபின் அந்த கனவை கைவிட்டு விட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் ஆதரவு கொடுத்தார். காரணம், அவர் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் டாக்டர் ஆகிவிட்டார். அவர் நன்றாக படிப்பார்'' என்று கூறியுள்ளார்.
கொச்சியில் பிஎஸ்சி சைக்காலாஜி படிக்க தொடங்கிய மமிதா பாதியில் அந்த படிப்பை விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.