நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதையடுத்து அவர் லவ் டுடே என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து ஹீரோவாக பயணிக்கிறார். சசிகுமார் - சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தை இயக்கி அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றதோடு அந்த படத்தில் தானும் ஒரு சிறிய வேடத்தில் நடித்து, நடிப்புக்காகவும் பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில் அடுத்து இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ஒருவரே இயக்கப் போகிறாராம். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ராங்கி, தக்ஸ் மற்றும் தற்போது செல்வராகவன் இயக்கியுள்ள 7ஜி ரெயின்போ காலனி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார். படத்திற்கு கரக்டட் மச்சி என்று தலைப்பு வைக்க ஆலோசித்து வருகிறார்கள். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.