4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இருவருமே நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதால் போட்டி போட்டு நடனமாடி உள்ளனர்.