'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் |
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடிகர் பிரித்விராஜ், தான் இயக்கி வந்த லுசிபர் திரைப்படத்தின் வேலைகள் ஒரு பக்கம் தான் தெலுங்கில் நடித்த சலார் படத்தின் பணிகள் ஒரு பக்கம் மற்றும் குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட சில படங்களில் பிசியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் தற்போது சத்தமே காட்டாமல் சர்ஷமீன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் பிரித்விராஜ். ஆனால் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஜூலை 25ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது..
இது குறித்த தகவலை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீர் எல்லைப் பகுதியில் நடக்கும் கதையாக ராணுவ பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. கஜோல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கியமான இன்னொரு கதாபாத்திரத்தில் இம்ரான் அலி கான் நடித்துள்ளார். தர்மா புரொடக்சன் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். கயோஸ் இரானி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.