ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் வார்- 2. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படம் உளவுத்துறை சம்பந்தப்பட்ட ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் 7500 தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் வெளியான படங்களில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் இதுவாகும். அதோடு இந்த படம் சுதந்திர தின வார இறுதியில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அன்றைய தினம் ரஜினியின் கூலி படமும் வெளியாகிறது.