2025ல் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை யார் ? | மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா! | ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது! - கார்த்திக் சுப்பராஜ் | 500 கோடி நிகர வசூலைக் கடந்த 'ச்சாவா' | சினிமா துறையில் பாலின பாகுபாடு: மாதுரி தீக்சித் கவலை | பிரபு, வெற்றி இணைந்து நடித்து ரிலீசுக்கு தயாரான 'ராஜபுத்திரன்' | 'ஹிட் 3' பார்க்காதீர்கள்: நானி சொன்ன காரணம் தெரியுமா? | ''ரசிகர்கள் மாறிவிட்டாங்க...'': ஷில்பா ஷெட்டி | 'அவள்' பட இயக்குனருடன் இணைகிறாரா ரவி மோகன்? | பராசக்தி இந்த காலகட்டத்திற்கு பொருந்தும்! - ஆகாஷ் பாஸ்கரன் |
புதுக்கோட்டை: மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 'என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என, கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் உடனே தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ‛‛மாற்றம் அமைப்பின் மூலம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம ஒரு விஷயம் செய்யும்போது அதில் மகிழ்ச்சி இருக்கும். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.