விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி | லண்டனில் சிம்பொனி இசை ; இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை : இளையராஜா |
நாளை மார்ச் 7ம் தேதி 9 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஷாம் நடித்துள்ள 'அஸ்திரம்' படம் பின் வாங்கிவிட்டது. போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என நேற்றே அறிவித்துவிட்டார்கள். புது வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனால், நாளை 8 படங்கள் வெளியாக உள்ளது. “அம்பி, படவா, ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், லெக் பீஸ், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி'' ஆகிய படங்கள்தான் அவை. 'ஜென்டில்வுமன், மர்மர், நிறம் மாறும் உலகில், எமகாதகி' படங்களின் பத்திரிகையாளர் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன.
அவற்றில் 'எமகாதகி' படத்தைப் பலரும் பாராட்டியுள்ளார்கள். அறிமுக இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 1997ம் ஆண்டு வெளிவந்த 'கடவுள்' படத்தில் அறிமுகமான வெங்கட ராகுல் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இறந்த பிறகும் ஒரு பெண் செய்யும் போராட்டம்தான் இப்படத்தின் கதை. பத்திரிகையாளர்கள் பாராட்டியதை படக்குழு சரியாகக் கொண்டு போய் மக்களிடம் சேர்த்தால் இப்படம் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளது.