என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் | பிளாஷ்பேக்: “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியின் பின்னணி |
நடிகரும், பாடகருமான மறைந்த ராகவேந்தர் மகள் கல்பனா ராகவேந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். பாலா இயக்கத்தில், சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' படத்தில் அவர் பாடிய 'கடவுள் தந்த' பாடலை யாரும் மறக்க முடியாது.
சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகத் தகவல் வெளியானது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று தற்போது முன்னேறி வருவதாகத் தகவல்.
கல்பனாவின் மகள் தயா பிரசாத் தனது அம்மா உடல்நிலை குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். “எனது அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். அவர் எல்எல்பி மற்றும் பிஎச்டி படித்து வருகிறார். அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. அதனால், அதற்காக மருந்துகளை உட்கொள்வார். அப்படி சாப்பிடும் போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இது தற்கொலை முயற்சியல்ல. யாரும் இதை வேறுவிதமாக மாற்றிப் பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், வழக்கமாக 8 மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவேன். இருந்தாலும் தூக்கமே வரவில்லை. எனவே மேலும் 10 மாத்திரைகளை சாப்பிட்டேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியவில்லை என கல்பனா தெரிவித்துள்ளார்.