பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? |
மலையாள சினிமாவின் இளம் எடிட்டர் ஷமீர் முகம்மது. 2015ல் வெளிவந்த 'சார்லி' படத்தில் அறிமுகமாகி இந்த வாரம் வெளிவந்த 'நரி வேட்ட' படம் வரையிலும் பணி புரிந்தவர்.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் முதலில் எடிட்டர் ஆகப் பணிபுரிந்தவர். பின்னர் அந்தப் படத்திலிருந்து விலகியவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கேம் சேஞ்ஜர்' படம் குறித்து அவர் பேசியவை வைரலாகி உள்ளது.
“ஷங்கர் சார் பணியாற்றும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அது ஒரு 'ஹாரிபில்' அனுபவம். நான் எதிர்பார்த்ததை விட படம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அதனால், அந்தப் படத்திலிருந்து பாதியில் வெளியேறினேன். படத்தின் முதற்கட்ட நீளம் ஏழரை மணி நேரம் இருந்தது. அதை மூன்று மணி நேரமாகக் குறைத்தேன். பின்னர் வேறொரு எடிட்டர் அதை இன்னும் குறைத்தார்.
ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வந்த 'இந்தியன் 2', தெலுங்கில் வந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து பெரிய தோல்வியைத் தழுவியது.
'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேசும் போது, படத்தின் கதை பல்வேறு எழுத்தாளர்கள் பலமுறை மாற்றப்பட்டது என்று பேசியிருந்தார். தற்போது அப்படத்திலிருந்து விலகிய எடிட்டர் ஷமீர் படம் பற்றியும், ஷங்கர் பற்றியும் விமர்சித்துள்ளார்.
இது தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத் திரையுலகத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் தரப்பிலிருந்து இதற்கு ஏதாவது பதில் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.