திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்த 'தக் லைப்' படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 24) நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு பேசியதாவது: சிறுவயதில் எல்லா பசங்களையும் வெளியே அழைத்துச் செல்வார்கள். சாக்லேட் வாங்கித் தருவார்கள். ஆனால் பிறந்தது முதலே எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன்.
சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று 40 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் என் அம்மா, அப்பா தான். என் அப்பாவை இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் அவர் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவார். ஆனால் நானே இங்கு எமோஷனல் ஆகிவிட்டேன்'' என கண்கலங்கி பேசினார்.
மேலும் சிம்பு பேசுகையில், ‛‛இந்த படத்தில் நான் பேசிய ஒரு டயலாக்கை வைத்து சமூக வலைதளங்களில் கமல் சாருக்கு அடுத்து சிம்புதான் அந்த இடத்தை பிடிக்கப் போகிறார் எனப் பேசுகின்றனர். ‛தேவர் மகன்' படத்தில் சிவாஜியும் கமலும் நடித்திருந்தனர். அப்படியென்றால் சிவாஜி இடத்தை கமல் பிடித்துவிட்டார் என அர்த்தமல்ல. சிவாஜி கணேசன் மிகப்பெரிய ஆளுமை. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அதே போல கஷ்டப்பட்டு, உழைத்து, நெட்டையாக, குட்டையாக, அசிங்கமாக, அழகாக விதவிதமாக நடித்துதான் கமல்ஹாசன் தனக்கான இடத்தை பிடித்தாரே தவிர யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. இளம் தலைமுறையினர் தன்னுடைய தோளில் ஏறிச் செல்லுங்கள் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். நான் அவரை ஒரு ஏணியாக பார்க்கிறேன். அவரை மதித்துதான் மேலே செல்வேனே தவிர, மிதித்து அல்ல'' எனப் பேசினார்.