தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

தெரு நாய்கள் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. ஆனாலும், விலங்கு நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகள் எப்போதும் விலங்குகளுக்கு ஆதரவாக பேசுவார்கள், அதற்கான பேரணி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் தெரு நாய்கள் விஷயத்தில் அந்த ஆர்வலர்கள் அமைதியாகிவிட்டனர்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் கூறுகையில், ‛‛நாய்க்கடி சரியானது என்று சொல்லவில்லை. அதை செய்தியாக சொல்லும் போது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் ரூ.4.5 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. இவற்றை காப்பாகத்தில் அடைக்க குறைந்தபட்சம் 2500 முகாம்கள் தேவைப்படும். அதற்கு அரசு செலவு செய்யும் தொகைக்கு பதிலாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். தெரு நாய்களை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். அதற்காக தானே ஓட்டு போட்டுள்ளோம். மனிதர்களே மனிதர்களை அடித்துக்கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல'' என தெரிவித்துள்ளார்.
இவரது பேச்சுக்கு வலைதளங்களில் கடும் விமர்சனங்கள். தனிப்பட்டமுறையிலும் அவரை தாக்கி பதிவிடுகின்றனர். பீட்டா அமைப்பின் ஆதரவாளர்களாக திரிஷா, வரலட்சுமி போன்றவர்கள் இன்னமும் தெரு நாய்கள் விஷயத்தில் வாய்ஸ் கொடுக்கவில்லை.
ஜல்லிக்கட்டு தடை விதிக்க வேண்டும் என்று வாய்ஸ் கொடுத்தவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அந்த பயத்தில் தெருநாய்கள் விஷயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் கப்சிப். அதேசமயம், நடிகை கீர்த்தி சுரேஷ் தெரு நாய்கள் விஷயத்தில் கவனம் தேவை. என் டிரைவர் கூட நாய்கடியால் பாதிக்கப்பட்டார் என்று மாற்றுகுரல் கொடுத்துள்ளார்.




