ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

தெலுங்கில் வெளியான சீதாராமன் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் மிருணாள் தாகூர். அதன்பிறகு பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தவர், தற்போது ஹிந்தி, தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மிருணாள் தாக்கூர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறார்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, கமல்ஹாசனுடன் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார். அதேபோல் எந்த தமிழ் ஹீரோவுடன் நடனமாட ஆசை என்று கேட்கப்பட்ட கேள்விக்கும், கமல்ஹாசனுடன் நடனமாடவே விரும்புகிறேன். காரணம் நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் மற்றவர்களை அவர் ஓரங்கட்டக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார் மிருணாள்.




