‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 2017ல் திருமணம் செய்துகொண்ட பிறகு சில நாட்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் மீண்டும் 2021 முதல் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் விராட பருவம், கஸ்டடி ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி கடந்த 2023ல் மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான நேர் படத்தில் கூட நெகடிவ் சாயல் கொண்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் ஹிந்தியில் ‛ஆர்ட்டிகிள் 70, மைதான்' என பிரியாமணி நடித்த படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‛ஆபிஸர் ஆன் டூட்டி' என்கிற படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் ஒரு அதிரடி போலீஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.