ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

'அர்ஜுன் ரெட்டி, அனிமல்' போன்ற படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வாங்கா. இவரது இயக்கத்தில் 'ஸ்பிரிட்' என்ற படத்தில் நடிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ல் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் பிரபாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 'சலார், கல்கி' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த 'ஸ்பிரிட்' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 2025ல் தொடங்கப்பட்டவில்லை.
இந்நிலையில், தற்போது ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக சந்தீப் ரெட்டி வாங்கா அறிவித்துள்ளார். தற்போது 'தி ராஜா சாப்' படப்பிடிப்பை முடித்துள்ள பிரபாஸ், அடுத்து 'பவுஜி' படத்தில் நடித்து வரும் நிலையில், இன்னும் 4 மாதங்களில் அப்படத்தை முடித்து விட்டு அடுத்த ஆண்டு மார்ச்சில் இருந்து ஸ்பிரிட் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போகிறார்.




