ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். தற்போது மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடக்கும் ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே அஜித்தின் கார் பழுதாகி நின்றது. இதனால் அவரால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
கார் பழுது தொடர்பாக அஜித் அளித்த பேட்டியில், ‛‛இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. கார் ரேஸில் இதுபோன்ற நிகழ்வு நடக்கத்தான் செய்யும். இது மனதை லேசாக பாதிக்கிறது. ஆனாலும் இன்னொரு போட்டி இருக்கும்'' என பாசிட்டிவ்வாக பேசினார்.

அஜித்தின் ரேஸை காண ஆவலாய் இருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
முன்னதாக இன்று நடந்த போட்டியை காண நடிகை ஸ்ரீலீலாவும் சென்றிருந்தார். அஜித் உடன் அவர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.




