பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை |

போயபாடி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படம் 'அகண்டா 2'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
நாளை வெளியாக உள்ள இப்படத்திற்கான முன்பதிவு தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் இன்னும் ஆரம்பமாகவில்லை. பொதுவாக பெரிய தெலுங்குப் படங்கள் வெளியாகும் போது தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகள் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கும்.
ஆந்திர அரசு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டதால், அந்தப் பகுதிகளில் முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது. ஆனால், தெலுங்கானாவில் இதுவரை ஆரம்பமாகவில்லை. இன்று இரவு படத்திற்கான பிரிமியர் காட்சிகளையும் திட்டமிட்டுள்ளார்கள். மதியத்திற்கு மேல் முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.