'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்தவாரம் வெளியான படம் ‛டியூட்'. இளைஞர்களை கவரும் விதமாக வந்துள்ள இப்படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கி உள்ளது. 5 நாளில் 95 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த டியூட் படம் நன்றி அறிவிப்பு விழாவில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் பேசியது : தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ,கேரளா மற்றும் பல வெளிநாடுகளில் இந்த படம் வெற்றி அடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. இந்த படம் சில விவாதங்களை உருவாக்கி உள்ளது. சிலருக்கு கதையில் மாற்று கருத்து உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது வேறொரு விஷயம் தெரிய வரும். இரண்டாவது மூன்றாவது முறை பார்ப்பவர்கள் படத்தை வேறு மாதிரி பீல் பண்ணுகிறார்கள். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்த இயக்குனர் கீர்த்தீஸ்வரனுக்கு நன்றி.
15 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பார்த்த சரத்குமாரை இதில் பார்க்கிறோம். சுப்ரீம்ஸ்டார் கம்பேக் எனலாம். அதேப்போல் ஹீரோயின் மமிதா பைஜூ சிறப்பாக நடித்துள்ளார். அவரின் சின்ன சின்ன நடிப்பு அசைவுகளை கூட பாராட்டுகிறார்கள். சாய் அபயங்கரின் இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இன்னும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் எனக்கு புது ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்திருக்கிறார்கள் அவர்களுக்கும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.