திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினி, தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக சூர்யா நடித்து வெளியான 'ரெட்ரோ' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூலை பெற்றுள்ளது.
ஆனாலும், இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் ஒரு சின்ன படமொன்று இயக்கலாம் என தீர்மானித்துள்ளார். அதற்கான கதையை தயாராக வைத்துள்ளார். இந்த படத்தை முடித்து திரைப்பட விழாக்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டு, பின்னர் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்.
அந்தப் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது எல்லாம் மனதில் வைக்காமல் எடுக்க திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். சின்ன பட்ஜெட், புதுமுக நடிகர்கள் என முடிவு செய்து தேடி வருகின்றார். அந்தக் கதையை பல வெர்ஷன்களில் எழுதி வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.