ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் விக்ரமின் மகனான துருவ், ‛ஆதித்யா வர்மா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து மகான் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் அவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்து தற்போது வெளியான 'பைசன்' படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து துருவ்வை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளனர். அவர்களில் ‛டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் கதை இவருக்கு பிடித்து உள்ளதாம். இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளிவரலாம். கணேஷ் கே பாபு தற்போது ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.