விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான காயட்டம் என்கிற படத்தை இயக்கியவர் சணல்குமார் சசிதரன். விருது பெரும் படங்களாக அதே சமயம் சர்ச்சைக்குரிய படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் தான் இந்த சணல்குமார் சசிதரன். நடிகை மஞ்சு வாரியார் தானே முன்வந்து இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பி, தானே தயாரித்த படம் தான் காயட்டம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே மஞ்சு வாரியருக்கும் சணல் குமாருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படம் வெளியான நிலையிலும் மஞ்சு வாரியர் இன்னும் படத்தை வெளியிட ஆர்வம் காட்டவில்லை.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மஞ்சு வாரியர் பற்றி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்ட சணல்குமார் சசிதரன், “மஞ்சுவாரியர் ஏதோ ஆபத்தில் இருக்கிறார்.. அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னை அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சிலர் தடையாக நிற்கின்றனர்” என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் அவர் மீது காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் சணல் குமார் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார்.
சமீபத்தில் அவர் காயட்டம் திரைப்படம் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் அந்த படத்தை வெளியிடுவதாக தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் அந்த படத்தை நான் இணையதளத்தில் இலவசமாகவே வெளியிடப் போகிறேன் என்று கூறினார். அது மட்டுமல்ல ஏற்கனவே கூறியது போன்று மஞ்சு வாரியார் தற்போதும் ஆபத்தில் தான் இருக்கிறார் என மீண்டும் பழைய பல்லவியையும் பாடினார். இவரது இந்த புதிய பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தன் மீது சோசியல் மீடியாக்களில் வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் இந்த வழக்கை அவர் மீது யார் கொடுத்துள்ளார் என காவல்துறையில் இருந்து நேரடியாக தகவல் வெளியிடப்படவில்லை.
ஆனால் சணல்குமார் தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு பற்றி அவரே மீண்டும் கூறுகையில், “நான் உங்களை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். அதனால் எனக்கு வேறு வழி இன்றி பொதுவெளியில் இது குறித்து பேச வேண்டி வந்தது. நீங்கள் இப்போது என் மீது கொடுத்துள்ள புகார் குறித்து இன்னும் விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறீர்கள் என உறுதியாக சொல்ல முடியும். காரணம் இதுகுறித்து நீங்கள் இதுவரை எந்த ஒரு அறிக்கை வெளியிடவோ அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி உண்மைகளை சொல்லவோ முன்வரவில்லை என்பதிலிருந்து இதை என்னால் உணர முடிகிறது” என்று கூறியுள்ளார் அவரது இந்த விளக்கத்திலிருந்து அவர் மீது மீண்டும் மஞ்சு வாரியார் தான் போலீசில் புகார் அளித்துள்ளார் என்று யூகிக்க முடிகிறது.