பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு |
'வாத்தி, லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி. தெலுங்கு இயக்குனரான இவர், தற்போது சூர்யா நடிப்பில் அவரது 46வது படத்தை இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'சூர்யா 46, வாத்தி, லக்கி பாஸ்கர்' படங்களை பற்றி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது: 'சூர்யா 46' ஒரு நல்ல குடும்பப் படமாக இருக்கும். கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி மாதிரி இருக்கும். 'சார்' (வாத்தி) படத்தின் 2ம் பாகம் உருவாகாது. ஏனெனில் அது தனிக்கதையாக இருக்க வேண்டுமென தனுஷ் விரும்பினார். ஆனால், லக்கி பாஸ்கர் படத்தின் 2ம் பாகம் நிச்சயம் உருவாகும். அதற்கான ஸ்கிரிப்ட் இன்னும் தயாராகவில்லை. நானும் துல்கர் சல்மானும் அவரவர் படங்களில் பிஸியாக இருக்கிறோம். நிச்சயமாக வரும். ஆனால், அதற்காக சிறிது நேரமெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.