9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

90களில் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை மஞ்சு வாரியர் திருமணத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் இப்போது வரை தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். அதேபோல 10 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழில் நடிக்க தனக்கு வந்த அழைப்புகளை ஒதுக்கி வந்த மஞ்சு வாரியர், அசுரன் படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் நுழைந்து வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழில் மூன்றாவது படமாக மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் சவாலான கதாபாத்திரம் ஒன்றில் கவுதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். அனகா இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பற்றி இயக்குனர் மனு ஆனந்த் சமீபத்தில் கூறும்போது, “தயாரிப்பாளரிடம் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியர் போன்ற ஒரு பவர்புல்லான நடிகை வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர் மஞ்சு வாரியரிடமே என்னை கதைசொல்ல அனுப்பி வைத்தார். முதலில் என்னிடம் கதை கேட்ட மஞ்சு வாரியர் அதன்பிறகு முழு திரைக்கதையுடன் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொண்டு திரைக்கதையை தயார் செய்து மீண்டும் அவரிடம் சென்று கூறினேன், அதை தொடர்ந்து வசனங்களுடன் கூடிய படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டையும் தருமாறு கேட்டார். அதன்பிறகு அதைப் படித்துவிட்டு சில நாட்கள் கழித்து அவரே அழைத்து இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அவர் தனது படங்களை தேர்ந்தெடுக்கும் முறை என்னை ஆச்சரியப்படுத்தியது என்றாலும் அவரது தொடர் வெற்றிக்கு இதுபோன்று கதைகளை கவனித்து தேர்ந்தெடுக்கும் அந்த முயற்சி தான் அவருக்கு கை கொடுத்து வருகிறது என்பதும் புரிந்தது” என்று கூறியுள்ளார் இயக்குனர் மனு ஆனந்த்..