ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது தாயை போல தற்போது பாலிவுட்டில் நடிகையாக மாறி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பாலிவுட் மட்டுமல்லாது தெலுங்கிலும் நுழைந்து ஜூனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' என்கிற படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக ராம்சரணுக்கு ஜோடியாகவும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் 'பரம சுந்தரி' என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக சமீப நாட்களாக கேரளாவில் முகாமிட்டுள்ளார் ஜான்வி கபூர்.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் கேரளாவில் உள்ள பல இயற்கை தலங்களை சுற்றி பார்ப்பதுடன் பிரசித்தி வாய்ந்த கோவில்களையும் தரிசித்து வருகிறார் ஜான்வி கபூர். இது குறித்து புகைப்படங்களை 'கேரள டைரிஸ்' என்கிற பெயரில் தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஜான்வி கபூர். இவருக்கு மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ, கேரளாவில் ஒரு வழிகாட்டியாக இருந்து இந்த இடங்களுக்கு சுற்றி வருவதற்கு துணையாக சென்று வருகிறார். கடந்த வருடம் ஜான்வி கபூர் ஹிந்தியில் நடித்த 'உலாஜ்' என்கிற படத்தில் ரோஷன் மேத்யூ அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




