சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
தெலுங்கு திரையுலகில் கடந்த 25 வருடங்களாக நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கட்ராஜ் என்கிற பிஷ் வெங்கட். தெலுங்கானா பகுதியை சேர்ந்த கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் பேசும் பாஷையில் இவர் வசனம் பேசுவதால் இவருக்கு திரையுலகில் பிஷ் வெங்கட் என்கிற பெயரே நிலைத்து விட்டது.
இந்த நிலையில் சமீப காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் அதற்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது.
பிஷ் வெங்கட்டின் மகள் தந்தையின் உடல்நிலை குறித்து கூறும்போது, “இங்கு சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் எனது தந்தை இணைந்து பல வருடங்களாக நடித்து வருகிறார். உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட பிரபாஸ் அவரது உதவியாளரை அனுப்பி வைத்து அது குறித்து விசாரித்தார். சிகிச்சைக்கு 50 லட்சம் வரை செலவாகும் என கேள்விப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனியுங்கள் அந்த சமயத்தில் அதற்கான செலவுகள் முழுவதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பிரபாஸின் உதவியாளர் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதேபோல சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் என் தந்தைக்கு சிறுநீரக தானம் அளிக்கும் ஒரு நபரை கண்டுபிடித்துக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அவர்களுடன் பல படங்களில் என் தந்தை இணைந்து நடித்துள்ளார். என் தந்தையை காப்பாற்ற ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.