டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்திருப்பது திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு உலகளவில் உயர்ந்தார். தற்போதும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 1995ல் சாய்ரா பானுவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்கள், அமீன் என்ற ஒரு மகன் உள்ளனர். 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‛‛தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி விட்டது. இதை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனையான முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா பானு'' தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த முடிவு பற்றி ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ‛‛திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.




