ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளிவந்த படங்களை ஆங்கில அரசு தணிக்கை செய்தது. படத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வசனமோ, காட்சிகளோ இருந்தால் அந்த படத்தை தடை செய்து விடுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் இந்தியர்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றியும் வெளிவந்த படம்தான் 'மாத்ருபூமி'.
அப்போது வங்கத்தில் நடத்தப்பட்டு வந்த 'சந்திரகுப்தா' என்ற நாடகத்தைதான் திரைப்படமாக இயக்கினார் எச்.எம்.ரெட்டி. இந்த நாடகம் அலெக்சாண்டர் படையெடுப்பையும் அவரை எதிர்த்த சந்திரகுப்ப மவுரியரையும் பற்றிய கதை. அந்த கதையை அப்படியே படமாக்கி அலெக்சாண்டர் படையெடுப்பை, ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பாகவும், அவர் செய்த அடக்குமுறைகளை ஆங்கிலேயர்களின் அடக்குமுறையாகவும், சந்திரகுப்த மவுரியரின் போராட்டத்தை சுதந்திர போராட்டமாகவும் உருவகப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.
இதில் டி.எஸ்.சந்தானம், பி.யூ.சின்னப்பா, டி.வி.குமுதினி, காளி என்.ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போர் காட்சிகள் செஞ்சிக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டையில் படமாக்கப்பட்டது. 2 ஆயிரம் பேர் நடித்தனர். இந்த படம் வெளியீட்டுக்கு தயாரானபோது தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தணிக்கை விதிமுறைகளை தளர்த்தினார். இதனால் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.