'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகில் வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் போக்கு பல வருடங்களாக இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. இதனை தொடர்ந்து பெரிய அளவில் அறிமுகம் இல்லாத பல நடிகைகள் கூட பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் அளித்தனர். அப்படி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரபல குணச்சித்திர நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் அளித்தார்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஹோட்டலில் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். கேரள போலீஸார் தன்மீது வழக்கு பதிந்த நிலையில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினுக்கு விண்ணப்பித்தார் சித்திக்.
ஆனால் அங்கு அவரது மனு நிராகரிக்கப்படவே சில நாட்கள் தலைமறைவாக இருந்த சித்திக் உச்சநீதிமன்றத்தை நாடி தான் கைது செய்யப்படாமல் இருக்க இடைக்காலத் தடை வாங்கினார். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு கூட அவரது இடைக்கால ஜாமின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் “சோசியல் மீடியாவில் உங்களால் தைரியமாக பதிவிட முடியும்போது ஏன் காவல் நிலையம் சென்று அப்போதே புகாரளிக்கவில்லை. எதற்காக புகார் அளிப்பதற்கு 8 வருடம் காத்திருந்தீர்கள் என புகார் அளித்த நடிகைக்கு கேள்வி எழுப்பியது நீதிமன்றம். அதற்கு நடிகை தரப்பில் பதில் அளித்த வழக்கறிஞர் தற்போது வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை தைரியம் தந்தது என்றும், அதனால் நிச்சயமாக தனக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பி தான் தற்போது மனுதாரர் புகார் அளிக்க முன் வந்தார் என்று கூறினார். ஆனால் அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.