மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை |
‛ஆர்ஆர்ஆர்' படத்தை அடுத்து மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ராஜமவுலி படம் இயக்கும் முறை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். அதில், ‛‛ஸ்கேல் என்பது ஒருபோதும் கதையாக இருக்க முடியாது. அது வெறும் கேன்வாஸ். இயக்குனர் ராஜமவுலி பெரிய பின்னணிகளை தேர்வு செய்கிறார். பெரிய காட்சி, ஸ்ட்ரோக்குகள் மூலம் ஒரு கதையைச் சொல்வதில் சிறப்பாக செயல்படுகிறார்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை பிரமாண்டத்தையும் வலுவான உணர்வுப்பூர்வமான கதைகளையும் கலந்து படமாக்கி இருந்தார். குறிப்பாக கதை சொல்லும் ஆழத்தில் சமரசம் செய்யாமல் காட்சிகளை காட்சிப்படுத்தும் அவரது திறமை எல்லா காலத்திலும் அவரை ஒரு சிறந்த இயக்குனராகவே வைத்திருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.