ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் ஹிருதயபூர்வம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன், முக்கிய வேடத்தில் ‛பூவே உனக்காக' சங்கீதா மற்றும் பிரேமலு நடிகர் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது.
இதில் மோகன்லால் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே தெரிகிறது. அவரிடம் ஒரு மாணவன் நீங்கள் கேரளாவை சேர்ந்தவரா, ? உங்களுக்கு பஹத் பாசில் தெரியுமா ? அவர்தான் எனக்கு பிடித்த நடிகர், மிகச்சிறந்த நடிகர் என்று கூறுகிறார். உடனே மோகன்லால் பஹத் பாசிலா ? அவரை விட சிறந்த சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள் என்று சொல்ல, இல்லை இல்லை பஹத் பாசில் தான் சிறந்த நடிகர் என்று அவர் கூறுவது போல டிரைலரில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து மோகன்லால் படத்தில் பஹத் பாசில் பெயர் இடம் பெற்றிருப்பது குறித்து சில ரசிகர்கள் சந்தோஷத்தையும், சில ரசிகர்களோ அவரை விட சிறந்த சீனியர் நடிகர் இருக்கிறார்கள் என மோகன்லால் சொன்னதால் தங்களது விமர்சனத்தையும் மாறி மாறி கமென்ட்டில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.