சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
அஜித் நடித்த 'வாலி', விஜய், ஜோதிகா நடித்த 'குஷி', படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.ஆர்யா. அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் மீண்டும் நடிகராக வலம் வரத் தொடங்கினார். முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் மளமளவென உயர்ந்தார். தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.
இந்த நிலையில் தான் ஈட்டிய வருமானத்திற்கு உரிய வரியான 7 கோடியே 57 லட்சம் செலுத்தவில்லை என வருமானவரித்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கை உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. 467 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல; எனவே அதனை தள்ளுபடி செய்கிறோம், என்று உத்தரவிட்டது.