என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் |
டிக் டாக் செயலியில் ஆபாசமான, கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் இலக்கியா. நீ சுடத் தான் வந்தியா என்ற படத்திலும் இவர் நடித்தார். இந்த படம் வந்ததா என்று கூட தெரியவில்லை. ‛டிக் டாக்' தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு வந்தார். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை இலக்கியா எடுத்துள்ளார். இதனால் மயங்கிய அவர் முதலில் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "என்னோட சாவுக்கு ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணு கூட பழக்கம், அதைக்கேட்டா என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த பதிவை அவர் நீக்கிவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்தி பரவிய நிலையில் ‛எல்லாமே பொய்யான செய்தி' என இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அவர் தற்கொலைக்கு தான் முயற்சித்தாரா... இல்லை அளவுக்கு அதிகமான ஊட்டசத்து மாத்திரை எடுத்ததால் மயங்கினாரா.... ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் மீது கூறிய குற்றச்சாட்டு என்ன என்பதை அவரே விளக்கினால் தான் உண்மை தெரிய வரும்.